Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

அடுத்தடுத்து மோதிய கார்….. “தப்பிய பிரபல ஹாலிவுட் ஹீரோ அர்னால்ட்டு”… நடந்தது என்ன?

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருப்பவர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். உலக அளவில் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அர்னால்டு சென்ற கார் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது.

அர்னால்டு சென்ற காரின் முன்பாக சென்ற இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதனால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து வரிசையாக மோதியுள்ளது இதில் மொத்தம் 4 கார்கள் மோதியது. அர்னால்டு சென்ற எஸ்யூவி மாடல் கார் ஒரு சிறிய காரின் மீது மோதி மேலே ஏறி விட்டது. நல்லவேளையாக அர்னால்டுக்கு ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் அவர் சீட் பெல்ட் அணிந்து இருந்தார். இதனால் பெரிய காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பல புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் விபத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அர்னால்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |