Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்….. படுகாயமடைந்த 3 பேர்….. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!

மோட்டார் சைக்கிள்- லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிவேகமாக பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. மேலும் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளான லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் விபத்தில் டேங்கர் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர், டேங்கர் லாரியில் இருந்த ஓட்டுநர், கிளீனர் என 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீது ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டேங்கர் லாரியில் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் டேங்கர் லாரியை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |