புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிக்கப்பட்டி கிராமத்தில் அரசு வழக்கறிஞரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கணேசன் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு சென்று விட்டு ஆலங்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கணேசன் ஒட்டி வந்த காரும் எதிரே வந்த லாரியும் பலமாக மோதியது அதே நேரத்தில் சந்தோஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறத்தில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.