Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து ரெய்டு…. வசமாக சிக்கும் முக்கிய புள்ளிகள்…. அடுத்த குறி யாருக்கு?…. கலக்கத்தில் Ex மினிஸ்டர்கள்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சொத்து குவிப்பு புகாரின் பேரில், சோதனை நடக்கிறது. காமராஜ் உறவினர், நண்பர் வீட்டில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்த ரெய்டு யாருக்கு வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கத்தில் இருக்கின்றன. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,தங்கமணி மற்றும் வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்த நிலையில் இன்று காமராஜ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. நேற்று ஓபிஎஸ் தரப்பு ஊழல் பட்டியலை வெளியிடும் என கூறப்பட்டதால், அடுத்த குறி யார் என தெரியவில்லை என்று கலக்கத்தில் எக்ஸ் மினிஸ்டர்கள் உறைந்து போய் உள்ளன.

Categories

Tech |