Categories
சினிமா

அடுத்தடுத்து விருதுகளை குவித்த விஜய் சேதுபதி படம்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகிய படம் “மாமனிதன்” ஆகும். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர்ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசை அமைத்திருந்தனர். யுவன் ஷங்கர்ராஜா தன் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் வாயிலாக இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் இந்த படம் டோக்கியோவில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய படம் எனும் கோல்டன் விருதினை பெற்றிருந்தது. இந்த நிலையில் மாமனிதன் படம் 3 விருதுகளை குவித்துள்ளது. அதாவது, தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த சாதனை விருதையும், விமர்சகர்கள் தேர்வு விருதையும் சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் படம் குவித்துள்ளதாக இயக்குனர் சீனுராமசாமி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். விருதுகளை குவித்துவரும் மாமனிதன் படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |