Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்…. தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம்…. மாநில முழுவதும் உஷார் நிலையில் போலீசார்….!!!!

தமிழகத்தில் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக பிரமுகர்களின் வீடு அலுவலகங்களில் தொடர்ந்து தாக்கப்பட்ட வருவதால் தமிழகத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாக தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்க துறையின் இந்த நடவடிக்கைக்கு அந்த தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. அதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக வழிபாட்டுத்தலங்கள்,ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் உள்ளனர். இரவில் அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகன சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலைமை சீராகும் வரையில் இந்த பாதுகாப்பு நீடிக்கும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |