சசிகலா தற்போது வேகத்தை விட விவேகம் முக்கியம் என மிகப்பெரிய இரு திட்டங்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா தமிழகம் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய புள்ளியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் சசிகலா எப்படியாவது ? ஆ.தி.மு.க. வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், கட்சியில் பொது செயலாளர் ஆகவும் சிலதிட்டங்களை செயல்படுத்த முடிவுஎடுத்துள்ளதாக சசிகலா ஆதரவு வட்டாரம் தகவலை பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா கைவசம் வைத்துள்ள முக்கிய இரண்டு திட்டங்களை செயல்படுத்த இருக்கின்றாராம். அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிலவற்றை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறாராம். இதற்காக காலக்கெடுவும் கொடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுள்ளநிலை, சசிகலா எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை என்றால் அடுத்த திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றாராம்.
அதில், அ.ம.மு.க. வில் பொது செயலாளராக தினகரனும், தலைவராக சசிகலாவும் இணைந்து வருகின்ற பொது தேர்தலை சந்திப்பது, மற்றும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டடுள்ளது. தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறா விட்டாலும், தி.மு.க. விற்கு அடுத்த கட்சியாக தன் கட்சியை கொண்டு வர சசிகலா திட்டமிட்டுள்ளார்.
1989 சட்டசபை தேர்தலுக்கு பின், ஜெ-ஜா. என்றஇரண்டு கட்சிகளும் அ.தி.மு.க. என்று ஒன்றுபட்டது. அதுபோல அ.தி.மு.க., அ.ம.மு.க.போட்டியிட்டு தோற்றுவிட்டால் சசிகலா அ.தி.மு.க., வை தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்து இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அ.தி.மு.க. அமைச்சகர்கள் சிலர் கலக்கத்தில் இருக்கின்றனர்.