Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து 3 அப்டேட்டுகளை வெளியிட ரெடியாகும் ‘பீஸ்ட்’ படக்குழு… செம குஷியில் தளபதி ரசிகர்கள்…!!!

அடுத்தடுத்து மூன்று அப்டேட்டுகளை வெளியிட பீஸ்ட் படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

Thalapathy Vijay and Beast team jets off to New Delhi, Know why | NewsTrack  English 1

இந்நிலையில் அடுத்தடுத்து மூன்று அப்டேட்டுகளை வெளியிட பீஸ்ட் படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 13-ஆம் தேதி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகும் எனவும், அதைத் தொடர்ந்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களில் முக்கியமான 2 அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |