Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடுத்தடுத்து 4 விக்கெட் காலி…! CSKவை தும்சம் செய்யும் KKR…. தொடக்கமே பரிதாபம் …!!

ஐபிஎல் 15ஆவது சீசன் ( 26/03/2022) தொடங்கி நடைபெற்று வருகின்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரவீந்தர் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே களமிறங்கினர்.

முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ்  சென்னை ரசிகர்களுக்கு அதிர்சியளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ருதுராஜ் கெய்க்வாட் 4ஆவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.பின்பு களம் புகுந்த உத்தப்பா மூன்றாவது மற்றும் நான்காவது ஓவரில் தலா ஒரு சிக்சர் விதம் பறக்க விட்டு சென்னை அணி ஸ்கோரை உயர்த்தினார். பின்பு ஐந்தாவது ஓவரை வீச வந்த் உமேஷ் யாதவ் முதல் பந்தில் கான்வே 3(8) விக்கெட்டை கைப்பற்றினார்.

இறுதியில் ஐந்து ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 29 ரன் எடுத்து தடுமாறிய நிலையில் அம்பதி ராயுடு களமிறங்கினார். அவரும் தனது பங்கிற்கு சிக்ஸர் விளாச சென்னை அணியின் ரன் வேகம் சீராக உயர உத்தப்பா 28 ரன்னில் வருண் சக்கரவர்த்தி ஆட்டமிழக்க, கேப்டன் ஜடேஜா களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 8.4 ஓவரில் 52 இருந்த போது அம்பதி ராயுடு 15 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

Categories

Tech |