Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து 5 ஹிந்தி படங்கள்….. விஜய் சேதுபதி காட்டில ஒரே மழை தா போங்க….!!!!

தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். இவர் தற்போது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.  சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘மும்பைகார்’ , ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ மற்றும் பேமிலி மேன் இயக்குனர்களின் ‘ஃபார்ஸி’ ஆகியவற்றில் நடித்து வரும் இவருக்கு மேலும் இரண்டு இந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இவரிடம் மொத்தம் ஐந்து இந்தி படங்கள் உள்ளதாகவும், புதிதாக தமிழ் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |