அசாமில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பொதுமக்கள் அச்சத்தில் வீதியில் வந்து தஞ்சமடைந்துள்ளனர்.
அசாம் மாநிலம் தேஜ்பூர் மற்றும் சோனித்பூரில் நேற்று தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 6.4 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்படுத்தி மக்கள் அனைவரும் வீதிகளில் தங்கமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜோனித்பூரில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 6 மணி வரை 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அதிகளவாக 4.2 ரிக்டர் அளவும், குறைவாக 2.6 ரிக்டர் அளவும் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் தூக்கமில்லாமல் இரவு முழுவதும் வீதியில் நின்று அவதிப்பட்டுள்ளனர்.