பல கடைகளில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பால் ஏஜென்சி கடையை நடத்தி வருகின்றார். இவர் இவருடைய கடையின் பூட்டை உடைத்து ₹2900மும், பக்கத்து தெருவில் உள்ள மீரா மொய்தின் என்பவருடைய செருப்பு கடையில் ரூ.2000மும், சீனிவாசன் என்பவருடைய கடையில் 1700 ரூபாயும், பக்கத்து தெருவில் உள்ள சாமுவேல் ராஜ் என்பவருடைய பழக்கடையில் ரூபாய் 2500, கோகுல்ராஜ் என்பவர் நடத்தி வரும் காப்பி கடையில் ரூ.1000மும் திருடு போயுள்ளது.
இது தொடர்பாக போலீசாருக்கு அடுத்தடுத்து புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் கவுல் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில் மன்னச்சநல்லூர் பகுதியில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டில் ஈடுபட்டது செல்வா என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் மீது பெரம்பலூர், கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.