தொடர்ச்சியாக 2 குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் பெரும் பதற்ற நிலை நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா உள்ளது. இதன் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு தொடர்ச்சியாக 2 குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்தா பர்வான் என்ற இடத்தில் நடந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வீடியோவுடன் ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. இருப்பினும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் காபூல் மீது தாக்குதல் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று டெல்லி வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் காபூல் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காபூலில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.