கொரோனா தொற்றை சமாளித்த சீனா உணவு பற்றாக் குறையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உணவு பாதுகாப்பு தொடர்பாக நாடுகளிடையே போட்டியை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என்றும் தைவான் மற்றும் மற்ற பகுதிகளில் பிரச்சினையை ஏற்படுத்தும் நிலைக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆளாகலாம் என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து கடுமையான சிக்கல்களை எதிர் கொள்கிறது.
அந்நாட்டின் யாங்செ நதிக்கரையில் வெள்ளம் ஏற்பட்டயடுத்து அந்நாட்டில் விவசாயத் துறை அதிக அளவு இழப்புகளை சந்தித்து பொருளாதார ரீதியாக சீனா பாதிக்கப்பட்டது. வெள்ளத்தினால் 6 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட உணவு பொருட்கள் பாழானதாக தெரியவந்துள்ளது. அதோடு வெட்டுக்கிளிகளின் பிரச்சனையும் ராணுவ தொற்று நோய்களாலும் அந்நாட்டின் விவசாயம் பெரும் அழிவை சந்தித்தது.
அதோடு கடந்த மாதம் மூன்று பெரிய சூறாவளிகள் ஏற்பட்டதால் நிலச்சரிவும் அந்நாட்டை நிலைகுலையச் செய்தது. உணவு பொருட்களின் விலை ஜூலை மாதத்தில் மட்டும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு சீன அரசாங்க தரவுகள் பன்றி இறைச்சியின் விலை 85 சதவீதம் உயர்ந்து விட்டதாக தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களை விவசாயிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் உணவு பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.