மகாராஷ்டிரா மாநிலத்தில் 19 வயது பெண் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்களால் நாளுக்கு நாள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தானேவில் 19 வயது பெண்ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் குஜராத்தை சேர்ந்தவர். மூன்று பேர் அவரை அடித்து, அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியும் உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.