தொடர்ந்து அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகிறனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோம்பை சாலைதெருவில் முகமது தமீம் அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எல்.எப்.மெயின் ரோட்டியில் உள்ள வணிக வளாகத்தில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நீடூர் முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு முகமது வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், கடையில் வைத்திருந்த 13,000 ரூபாய் திருடு போயிருந்துள்ளது.
மேலும் அதே வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் உரக்கடை மற்றும் எலக்ட்ரிக் கடையின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முகமது தமீம் அன்சாரி உடனடியாக கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.