ஒமைக்ரானுக்கு அடுத்து வரும் கொரோனா சிறு திரிபுகளாக பிரிந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸால் குறைந்த பாதிப்புகள் உள்ள நிலையில் அதற்கு அடுத்து வரும் கொரோனா திரிபு தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சில காலத்திற்கு உலக மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், கொரோனா திரிபுகளின் கடைசி நிலையாக இந்த ஒமைக்ரான் இருக்காது. இது மேலும் சில திரிபுகளாக பிரிந்து மக்களை தாக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு அடுத்து திரிபு முன்னைய நிலையை விட தீவிரத் தன்மையை கொண்டதாக இருக்கும் எனவும் மேலும் சிறு திரிபுகளாகப் பிரிந்து பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த திரிபுகளால் தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும். ஆனாலும் நோய் தொற்றின் ஆபத்தையும், உயிரிழப்பையும் தடுப்பதில் தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது என்று கூறியுள்ளார்.