Categories
அரசியல்

“அடுத்தது நம்ம ஆட்சிதான்…!!” பெருமை கொள்ளும் ராகுல்காந்தி…!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வந்தது. இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்து கோவாவை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது கோவாவில் இன்னும் சில நாட்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் – பாஜக – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி – மேற்கு வங்க மாநில முதலமைச்சர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. இந்நிலையில் கோவா மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது, “நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே சுரங்கத்தை மீட்கும் பணியில் தீவிரம் காட்டுவோம். அதோடு வரும் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.” என அவர் கூறினார்.

Categories

Tech |