இந்திய பிட்சுகள் குறித்து முன்னாள் கேப்டன் ஜிம்பாப்வே ட்விட்டர் பக்கத்தில் நக்கல் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஐந்து நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டி இரு நாட்களில் முடிவடைந்ததால் பலரிடையே பல கருத்துக்கள் வெளியானது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ததேந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் விராட் கோலி, ஜோ ரூட் இருவரும் விவசாய நிலத்தில் அமர்ந்திருப்பது போன்றும் அவர்கள் பின்னால் ட்ராக்டர் வருவது போன்றும் புகைப்படம் அமைந்திருந்தது . இதனுடன் இரண்டு கேப்டன்களும் நாலாவது டெஸ்ட் பிட்சை ஆய்வு செய்வது போல் உள்ளது என கிண்டலாக குறிபிட்டுள்ளார் .இந்த செய்தி மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் நாலாவது டெஸ்ட் பிட்ஸ் எப்படி இருக்குமென அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது
Looks like both Captains are interested in the 4th test pitch. 😁 pic.twitter.com/qZK3Oeqtzm
— Tatenda Taibu (@taibu44) February 26, 2021