Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்தவன மட்டும் கூப்பிடாதீங்க…. கும்மியடிச்சு கதைய முடிச்சிருவாங்க”…. விஜய் ஆண்டனி பதிவு வைரல்…..!!!!!!

விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்ற 2005 ஆம் வருடம் சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதை அடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன்யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளரானார். இதன் பிறகு சென்ற 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன் பின்னர் பிச்சைக்காரன், சலீம், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் என பல திரைப்படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் அதில் கூறியுள்ளதாவது, உங்க குடும்பத்துல ஏதாவது பிரச்சனைனா, முடிஞ்ச வரைக்கும் உங்களுக்குள்ளே அடிச்சுக்குங்க. இல்ல விட்டு விலகிடுங்க. இல்ல கையில கால விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவனை மட்டும் கூப்பிடாதீங்க. கும்மி அடிச்சு கதையை முடித்துவிடுவார்கள் என பதிவிட்டு இருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |