பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மத்திய அரசு செய்த சாதனைக்கு திமுக வழக்கம் போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நரிக்குறவர் மற்றும் குருவிக்கார சமூகங்கள் மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
காலம் காலமாக அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக கிடப்பில் கிடந்தது.பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும் மத்திய அரசின் எஸ்டி பிரிவினரின் பதிவாளர் கவனத்திற்கு அவர்களின் மணுக்களை கொண்டு சென்று நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தை பழங்குடியினர் எஸ் டி பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தமிழக பாஜகவால் விரைவில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தான் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை மாநில பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்ட திமுக, அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரஸை ஒட்டுகிறது. இதுதான் திராவிட மடலா? தங்களால் எதுவும் உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால் அடுத்தவர் உழைப்பில் ஒட்டி பிழைக்க, ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திமுக? என கேள்வி எழுப்பியுள்ளார்.