பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து லட்சுமிமேனன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் மூன்று சீசன்கள் முடித்து தற்போது நான்காவது சீசன்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. நான்காவது சீசனில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவாதம் சமீப நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பட்டியலில் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், லட்சுமிமேனன், விஜய் டிவி புகழ் என பலரது பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து லட்சுமிமேனன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப் போவதில்லை. அடுத்தவர்கள் சாப்பிட்ட தட்டையும், பயன்படுத்திய கழிவரையையும் என்னால் சுத்தம் செய்ய முடியாது. இனியாவது நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறேன் என்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.