Categories
மாநில செய்திகள்

அடுத்தாண்டு பெண்களுக்கு 1,000 உறுதி: இல்லத்தரசிகளுக்கு வெளியான முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபட்டது.  இந்நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ1,000 அடுத்தாண்டு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியால் தான் பெண்களுக்கான உரிமைத் தொகையை உடனடியாக வழங்க முடியவில்லை. தற்போது முதல்வர் நிதி நெருக்கடிகளை சீர் செய்து வருவதால், அடுத்தாண்டு உறுதியாக வழங்கப்படும் என்றார்.

Categories

Tech |