விக்னேஷ்சிவன் இயக்கத்தில் வெளியாகிய “காத்துவாக்குல இரண்டு காதல்” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து விஜய் சேதுபதி, கமல் நடிப்பில் வெளியான “விக்ரம்” படத்திலும் சீனுராமசாமி இயக்கத்தில் “மாமனிதன்” படத்திலும் நடித்துள்ளார். இதில் மாமனிதன் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி தமிழ், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கைவசம் விடுதலை, மெர்ரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ், மும்பைக்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணிநடிகரான மகேஷ்பாபு அடுத்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், இதில் விஜய்சேதுபதி நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் “விக்ரம்” திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்ததை அடுத்து மகேஷ்பாபு படத்தில் நடிக்க உள்ளதை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக கடந்த 2020ம் வருடம் தெலுங்கில் வெளியாகிய உப்பெனா திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.