தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநரான செல்வ ராகவன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய படம் “நானே வருவேன்”. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாகிய நானே வருவேன் படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு மீண்டுமாக செல்வராகவன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கேங்ஸ்டர் படத்தை செல்வ ராகவன் இயக்க, அந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ராயன் என பெயரில் அந்த படத்தை தாணு தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.