Categories
உலக செய்திகள்

அடுத்து கிளம்பிருச்சு “எக்ஸ் இ”…. நிபுணர்கள் சொல்வது என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிய கொரோனா மரபணு மாற்றம் எக்ஸ் இ வேகமாகப் பரவி வருகிறது. இதனை கண்காணித்து வருவதாகவும், மக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை எனவும் மரபணு ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒமிக்ரானின் திரிபு வடிவமாக இந்த புதிய வைரஸ் இருக்கிறது. ஒமிக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது.

இது தொடர்பாக டாடா மரபணு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசியபோது “ஜனவரி மாதம் மத்தியில் முதன் முறையாக இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 600 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. இது மேலும் ஒரு கொரோனா அலையை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வலிமையானது ஆகும். இதன் தன்மையை அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆகவே முககவசம், தடுப்பூசி ஆகியவற்றை தொடர வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |