திரையுலகில் நடிக்க வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு நடிகைகள் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகையான ஷாமா சிக்கந்தரும் தனக்கு சில பேர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் “சென்ற காலங்களில் சிலர் தவறாக என்னை அணுகினர். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னுடன் நட்பாக இருந்தபடியே அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி கேட்டனர்.
நான் சினிமாவிற்கு வந்த புதிதில் திரையுலகில் இது போன்ற நிலைமைகள் இருந்தது. சில பேரின் தவறுகளுக்காக மொத்த திரையுலகினரையும் குற்றம்சொல்ல முடியாது. ஆனால் தற்போது இளம்டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் பெண்களை கவுரவமாக நடத்துகின்றனர். திரையுலகில் முன் இருந்த நிலைமை தற்போது இல்லை. இன்றைய தலைமுறையினர் அவர்களின் வேலையில் தான் கவனம் செலுத்துகிறார்கள். நல்ல படம்கொடுக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்களே தவிர்த்து பெண்கள் மீதான பாலியல் எண்ணங்களை பார்க்க முடிவதில்லை. ஆனால் சில வருடங்களுக்கு முன் நிலைமை மோசமாக இருந்தது” என்று கூறினார்.