அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த உள்ள அதிமுக மாஜி அமைச்சர் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி என அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அடுத்து யார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலவருமான ஓ.பன்னீர் செல்வம் குறித்து தான் முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.வேட்பு மனு தாக்கலின்போது ஓபிஎஸ்ஸும் அவரது மகனும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்து மற்றும் அசையா சொத்துகள் குறித்து உண்மையை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி வந்த திமுக நிர்வாகி மிலானி என்பவர், வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்களுக்கான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, “ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதும் வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கு உடனடியாக தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ப.ரவிந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
அத்துடன் இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை 07-02-2022 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை தொடுத்த மிலானி என்பவருக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் படி காவல்துறையின் சார்பாக உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்