உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆளும் பாஜக கட்சியில் இருந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே செல்வாக்கு மிக்க தலைவரும், முன்னாள் அமைச்சருமான தாரா சிங் சவுகான் திடீரென அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்து கொண்டார்.
இவ்வாறு தேர்தல் நேரத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பாஜகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான வர்மா என்பவரும் நேற்று திடீரென சமாஜ்வாதி கட்சியில் இணைந்து கொண்டார்.