Categories
மாவட்ட செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. அண்ணனை வெட்டி தம்பிக்கு போட்டோ மற்றும் வீடியோ அனுப்பிய கும்பல்…. பின்னணி என்ன…? கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

வேலை தேடி சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டை கிராமத்தில் சீனிவாசன்-பாரதி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ஆம்  தேதி வெங்கடேசன் வேலை தேடி செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனின் தம்பி மணிகண்டனின் வாட்ஸ் அப்புக்கு வெங்கடேசன் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வெங்கடேசனின்  நண்பர் நிர்மலிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் வெங்கடேசனை யாரோ கூட்டிச்  சென்று அடித்து போட்டு விட்டதாகவும், அதனை நான் கூறினால் என்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேசனை கொலை செய்து கசம் பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று வெங்கடேசனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் சந்தேகத்தின் பேரில் திவாகர், சதீஷ், சூர்யா, கரிகிரி ஆகியோரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து  புதைத்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யா மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |