கொரோனாவில் இருந்து புதிய அவதாரம் எடுத்த ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸ் நாடு முழுவதிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கூறியதாவது,” கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. அது இன்னும் நிறைய பெருந்தொற்றுக்கள் வரும். ஆகவே அதனை சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போதே அடுத்த தொற்றுக்கு தயாராக இருக்கவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.