சத்தீஸ்கர் மாநிலம் ராய்காரில் கெலோ விகாரம் காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லீனா நாக்வன்ஷி (22) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் இன்ஸ்டா பிரபலம் ஆவார். அதோடு தனியாக யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகிறார். இவர் யூடியூப் சேனலில் பெரிதாக பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் இவரை 10,000 பேர் பின் தொடர்கிறார்கள். அதன் பிறகு லீனா பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அடிக்கடி செய்திகளிலும் வருவார்.
இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லீனா திடீரென மாடியில் உள்ள தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லீனாவை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லீனாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.