மாணவர்கள் பள்ளி ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அந்த ஆசிரியை ஒரு மாணவனின் மோசமான கல்வி திறமை குறித்து மாணவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியயை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கக்கூடாது என பள்ளி துணை முதல்வரையும் மாணவர்கள் மிரட்டி அவரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இதுவரை புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.