ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். இதற்கு முன்னதாக நேற்றைய தினம் (பிப்ரவரி 16) இதே மாவட்டம் அந்தியூர்-அத்தாணி பேரூராட்சியின் 3-வது வார்டு உறுப்பினர் எம்.ஐயப்பனும், சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் வத்திராயிருப்பு பேரூராட்சியில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா என்பவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அம்மாபேட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் எல்லாம் தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.