Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. நடந்து சென்ற பெண்…. அத்துமீறிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!!

நாடு முழுவதும் சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வந்தனர். இதனை தடுக்கும் நடவடிக்கையாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பாலியல் தொல்லை அதிகரிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு வேல்ஸ் சாலையில் நடந்து சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக ரவுடிகளை போல் போலீசாரின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருவொற்றியூர் காவல் நிலைய காவலர் வனராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நபர்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.

Categories

Tech |