நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏராளம். அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. தற்போது வரை நாம் பலரையும் கொரோனாவால் இழந்துள்ளோம். அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகா என்ற 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தீவிரமாகி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் 30 வயதான சண்முகப்பிரியா என்ற கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.