அடுத்த வருடத்தில் 31 ரஃபேல் ரக போர் விமானங்கள் விமானப் படையில் சேர்க்கப்படும் என்று விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா கூறியுள்ளார். விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் நடந்த அணிவகுப்பை பார்வையிட்ட அவர், அடுத்த ஆண்டில் 36 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தான் முழுமையான இலக்கு ஆகும். இந்திய விமானப் படையில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், அதிநவீன தொழில்நுட்பங்கள் படையில் சேர்க்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்கள்.லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பான கேள்விக்கு எங்கள் தரப்பில் என்ன நடவடிக்கை தேவையோ? அதை நாங்கள் எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.