Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டும் ஆன்லைன் வகுப்புகள்… கல்வி அமைச்சர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டுமே கலந்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது வரை கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டும்தான் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், “அடுத்த கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் நேரடி வகுப்புகள் என இரண்டுமே கலந்து நடக்க வாய்ப்புள்ளது. ஜேஇஇ போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் பிராந்திய மொழிகளில் நடத்தவும், அதனைப்போலவே பிராந்திய மொழிகளில் தொழிற்கல்வி படிப்பை கொண்டுவரவும் திட்டமிடப்பட்டு வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |