Categories
உலக செய்திகள்

அடுத்த ஆபத்து: “கண்டிப்பா இது நடக்கும்”…. எகிறும் “புவி வெப்பநிலை”…. அதிர்ச்சி கொடுத்த நாசா….!!

புவியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ள நிலையில் உலகெங்கிலும் எதிர்மறையான காலநிலை மாற்றம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது.

புவியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில் உலகில் எதிர்மறையான காலநிலை மாற்றம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்று நாசாவின் கோடார்ட் இயக்குனர் கவின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சேமிப்பு வரலாற்றில் தற்போதுவரை பதிவான வெப்பநிலை தரவுகளின்படி 2021 ஆறாவது வெப்பமான ஆண்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புவி வெப்பமயமாதலில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதையும் அவர் கூறியுள்ளார். அதாவது கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவது போன்ற பல முக்கிய மாற்றங்களை உலகில் கொண்டு வந்தால் புவிவெப்பமயமாதலினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து நாம் தப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |