Categories
கிரிக்கெட் விளையாட்டு

”அடுத்த இலக்கை நோக்கி பயணம்” – ஜெய்ஷ்வால்!

யு-19 உலகக்கோப்பைத் தொடர் முடிவுடைந்ததையடுத்து, அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக உலகக்கோப்பை சென்சேஷன் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 17ஆம் தேதி தொடங்கிய யு-19 உலகக்கோப்பைத் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இறுதிப் போட்டியில் வங்கதேச அணியிடம் இந்தியா போராடி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் 88 ரன்கள் குவித்தார். அதனோடு 6 போட்டிகளில் விளையாடி 400 ரன்கள் குவித்துள்ளதால் இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதனால் தற்போதைய இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்சஷ்வால் தான் சென்சேஷன்.

வங்கதேச அணிக்கு எதிராக தோல்வியடைந்தது பற்றி ஜெய்ஷ்வால் பேசுகையில், ” இந்தத் தொடரினை மிகவும் ரசித்தேன். இந்த மைதானங்களில் எப்படி ஆடவேண்டும் என்ற நல்ல அனுபவம் கிடைத்தது. இனி கொஞ்சம் புத்திசாலிதனமாக ஆடவேண்டும் என்பதை அறிந்திருக்கிறேன்.

யஷஸ்வி ஜெய்ஷ்வால்

அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கவுள்ளேன். தொடர்ந்து நல்ல பயணத்தை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

பானி பூரி விற்ற கைகள் இந்திய அணிக்கு ஆடுவதைப் பார்த்து இந்தியாவே மெய்சிலிர்த்து போயுள்ளது. அடுத்ததாக இளம் வீரர் ஜெய்ஷ்வால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |