வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.