தமிழகத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.