தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனை அடுத்து இன்று இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக இருந்தவர் இளங்கோவன். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், அதிமுக சட்டப்பேரவை செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராக இருப்பவர் இளங்கோவன் அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இளங்கோவன் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் முக ஸ்டாலின் குறி வைக்கிறாரா? என்று கூறப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டுமே ரெய்டு நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமையிடத்தை நெருங்கவில்லை என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது எடப்பாடி பழனிச்சாமியை நெருங்கும் வகையிலும் இளங்கோவனுக்கு செக் வைக்கப்பட்டுள்ளதா? என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.