Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடுத்த சிக்கல்!”…. முதல்வருக்கு மிரட்டல்?…. வசமாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி…. பரபரப்பு புகார்….!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தீவிர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் “கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி கோவை தொண்டாமுத்தூரில் அதிமுக பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய ராஜேந்திர பாலாஜி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பற்றி தரக்குறைவாக பேசினார் என்று கூறியுள்ளார்.

மேலும் ராஜேந்திர பாலாஜி ‘தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணியின் கோட்டை இப்போது தைரியம் இருந்தால் நீங்கள் இங்கு வரவேண்டும்’ என்று நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் மு.க.ஸ்டாலினை பற்றி பேசியுள்ளார். அதேபோல் மத்திய அமைச்சர் ராசா பற்றி தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் ராஜேந்திர பாலாஜி கூட்டத்தில் பேசினார்” என்று புகழேந்தி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |