அடுத்த லோக்சபா தேர்தலில் ரிமோட் ஓட்டிங் முறை அறிமுகம் செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமன்றி தாங்கள் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வேட்புமனு பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்டு கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் வாக்களிக்க முடியாத முதியோர்களுக்கு தபால் வாக்கு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த லோக்சபா தேர்தலில் ரிமோட் ஓட்டிங் முறை அறிமுகம் செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த புதிய தொழில் நுட்பம் மூலம், தேர்தலின்போது தொகுதியிலுள்ள ஓட்டுச்சாவடிக்கு நேரில் செல்லாமல் ஓட்டளிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார். ஓட்டு மையங்களில் உள்ள வெப்கேமரா மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் மூலம் வாக்காளர் அடையாள உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.