அ.தி.மு.க கட்சி வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இடையர் எம்பேத்தி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு அ.தி.மு.க சார்பில் ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடும் ஆறுமுகம் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் பேசினார். அதில் தி.மு.க ஆட்சியில் நடைபெறும் அவல நிலைகளை மக்களிடையே எடுத்துக் கூறி உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க கட்சியானது வெற்றி பெறும் என்றார். அதன்பிறகு அடுத்து வரும் தேர்தலில் அ.தி.மு.க கட்சி வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்றார்.