Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகுது…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ முழுவிபரம்…!!!!!

17.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் க6ன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

18.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 19.04.2022: தென் தமிழகம்,6 நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.20.04.2022: வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):மணமேல்குடி (புதுக்கோட்டை) 10, பேராவூரணி (தஞ்சாவூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), காட்டுமன்னார்கோவில் (கடலூர்) தலா 6, மதுக்கூர் (தஞ்சாவூர்) 5, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 4, சீர்காழி (மயிலாடுதுறை), நெய்வேலி AWS (கடலூர்), பெரியகுளம் (தேனி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), பென்னாகரம் (தர்மபுரி) தலா 3, பெலாந்துறை (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), சேலம் (சேலம்), ஆண்டிபட்டி (தேனி), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்) , தம்மம்பட்டி (சேலம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அரியலூர் (அரியலூர்), வாடிப்பட்டி (மதுரை), பாலக்கோடு (தர்மபுரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), செங்கம் (திருவண்ணாமலை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறி6ச்சி), ஓமலூர் (சேலம்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) தலா 2 மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை. வானிலை குறித்த மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை கண்டுகொள்ளலாம்.

Categories

Tech |