Categories
மாநில செய்திகள்

அடுத்த பரபரப்பு வீடியோ…. பதற வைக்கும் திமுகவினர்…. அஞ்சி ஓடும் மக்கள்…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் 125 பேருடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதையடுத்து முறைப்படி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மதுரவாயல் அருகே அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து நொறுக்கினர். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சி ஆலம்பட்டி புதூரில் திமுகவுக்கு எதிராக தேர்தல் வேலை செய்ததாகவும்,வெற்றி கொண்டாட்டத்தை போலீசாரிடம் சொல்லியதாக கூறி ஒருவரை திமுகவினர் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |