அடுத்த பிறவியில் வவ்வால் மற்றும் பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் சாபம் விடுக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால்ம், பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை சைவ மடத்தின் ஆதீனம் ஞானசம்பந்த தேசிகாச்சர்யார் பேசியுள்ளார். தற்போது பலருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை. அதனால் நல்ல சம்பளம், அழகு இருந்தாலும் பெண் கிடைப்பதில்லை. பெண் கிடைத்தாலும் நல்ல மாமியார் கிடைப்பதில்லை. நல்ல மாமியார் கிடைத்தாலும் மருமகள் சரியாக இருப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இப்படி சரமாரியாக அவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories