Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடுத்த போட்டியில்….. தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்விக்கு பின் விராட் கோலி போட்ட ட்விட்..!!

தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்விக்கு பின் விராட் கோலி அடுத்த போட்டியில் கவனம் செலுத்துகிறோம்” என்று ட்விட் செய்துள்ளார்.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய  இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) விராட் கோலி (12) மூன்று பேரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினர். இருப்பினும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 40 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) 68 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. இதையடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்கம் சரியில்லை என்றாலும், எய்டன் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். தென்னாபிரிக்க அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்ரம் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். மேலும் டேவிட் மில்லர் அவுட் ஆகாமல் 46 பந்துகளில் 59* ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு பின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ட்விட் செய்துள்ளார். அதில், இன்றைய நாள் கடினமானது. ஆனால் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்யும் போது செய்த சில தவறுகளை செய்தது. தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது எய்டன் மார்க்ரம் அஸ்வின் வீசிய 12ஆவது ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேச்சை விராட் கோலி விட்டுவிட்டார். அப்போது மார்க்ரம் 35 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல ரோஹித் சர்மாவும் எளிய ரன் அவுட்டை மிஸ் செய்தார். அதன் பின் தான் அவர் 52 ரன்கள் வரை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |